கொடைக்கானல் மலை பூண்டு: “இந்த வெள்ளைப் பூண்டுதான் எங்களைக் கடனில் தள்ளும் பயிர்”
புவிசார் குறியீடு பெற்ற 'ஒரு பூண்டை' விதைத்தும் லாபம் பெறாமல், கடும் நெருக்கடியில் சுழல்கிறார்கள் விவசாயிகள். மருத்துவ குணமும், தேவையும் அதிகம் இருக்கும் இந்த பூண்டு விவசாயிகளின் சிரமங்கள் பற்றிக் கேட்கையில், இன்றைய விவசாயம் என்பது தன்னலமற்ற தொண்டு நிறுவனங்களின் சேவையைப் போன்று மாறி வருகிறது, என்று நினைக்கத் தோன்றுகிறது..