கூவம் சுத்தப்படுத்தலும், வெள்ளப்பெருக்கும்! எதைச் சுத்தப்படுத்துகிறார்கள்?
சென்னையில் கூவம் நதி சுத்தப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தாலும் அதை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது. கூவம் நதியைச் சுத்தப்படுத்தல் என்ற பெயரில் வெளியே அனுப்பப்படுவது, பூர்வகுடி மக்கள் மட்டுமே. பெரிய தொழில் நிறுவனங்கள் பல, கூவம் ஆற்றை அபகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.