தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்! டெல்லியில் விவசாய சங்கத் தலைவர்கள் உண்ணாவிரதம்!
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 19-வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாய சங்கத் தலைவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
டெல்லி மற்றும் டெல்லி எல்லைப்புற சாலைகளில் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியும் முடிந்த நிலையில், விவசாய சங்கங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Delhi: Farmers' leaders sit on hunger strike at Tikri border as their protest against Centre's farm laws enters 19th day.
— ANI (@ANI) December 14, 2020
"Centre is being stubborn about our demands. This is an attempt to wake them up," says Balkaran Singh Brar, Working President, All India Kisan Sabha, Punjab pic.twitter.com/KY7mgGwJiT
டெல்லியை இணைக்கும் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று டெல்லியில் போராட்டம் நடைபெறும் இடங்களில் விவசாய சங்கங்களின் தலைவர்கள் காலை 8 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விவசாய சங்க நிர்வாகிகள் உண்ணாவிரம் இருந்து வருகின்றனர். மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளும் விவசாயிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
