காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை!
பட்டாசு மாசு கரோனா தொற்று உடையவர்களை அதிகம் பாதிக்கும் என்பதால், பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை வித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்குப் பட்டாசு வெடிப்பது தான் தனிச்சிறப்பு. ஆனால், கரோனா தொற்று காரணமாக, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில், பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரிக்கையில் கரோனா தொற்று பாதிப்பு உடையவர்களுக்கு, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று காரணம் கூறப்பட்டுள்ளது.
தலைநகரான டெல்லியில், சாதாரணமாகவே காற்று மாசு அதிகம் இருப்பதால் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளது. மேலும், டெல்லியில் வரும் 30ம் தேதி வரை பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் என இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Image courtesy : Reuters

Related Stories
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும் - தமிழக அரசு உத்தரவு
அச்சுறுத்தும் காற்று மாசுபாடு - டெல்லியில் நவம்பர் 5 வரை பள்ளிகளுக்கு விடுமுறை
பட்டாசுத் தொழிலாளர்கள்!