எந்தெந்த பகுதிகளில் மழை? சென்னையின் நிலவரம்?
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், என்ன நடக்கிறது என்பது பற்றிய விரிவான தொகுப்பு.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை சென்னை அருகே அது, கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிர மழைக்குக், காலநிலை மாற்றம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்ட அதிகப்படியான மழை பொழிவு தற்போது, குறுகிய காலத்தில், அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
சென்னை நகரில் மிகப்பெரிய பின் விளைவு ஏற்படக் காரணம், அதிகப்படியான மக்கள் தொகை, நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு போன்றவை குறிப்பிடப்படப்படுகிறது.
Nair Road, T Nagar #ChennaiRains pic.twitter.com/5SNmL7wKDo
— Aruna (@arunaravi25) November 11, 2021
சென்னையில் இன்று மாலை வரை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு முதல் பல இடங்களில், கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக, வியாசர்பாடி, கணேசபுரம், அஜாக்ஸ், கெங்கு ரெட்டி, மேட்லி, துரைசமி, பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன், வில்லிவாக்கம், காக்கன் ஆகிய சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளது.
Duraiswamy Subway T Nagar #chennaifloods #ChennaiRains pic.twitter.com/6H37Fi9hH3
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) November 11, 2021
அதேபோல் நுங்கம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. விடிய விடியக் கொட்டி தீர்த்து வரும் கன மழையால் சோழவரம், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியுள்ளன. அதில் புழல் ஏரியிலிருந்து விநாடிக்கு 3000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் பூண்டி ஏரியிலிருந்து 6000 கன அடி நீரும், வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் 5240 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Puzhal lake brimming with water..#ChennaiRains #Chennai pic.twitter.com/BVVtpStaVN
— Chennai Updates (#WearAMask????) (@UpdatesChennai) November 8, 2021
ஏரிகளில் நீர் வெளியேற்றம், மற்றும் மழையின் காரணமாக கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். எனினும், மக்களின் உடைமைகள் பெருமளவு சேதமடைந்துள்ளது. பல மருத்துவமனைகளிலும், வெள்ள நீர் புகுந்துள்ளது. எனவே நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சாலையோர மக்களின் நிலை என்ன?
சமீபத்தில் நான் பதிவு செய்ய சில விஷயங்களில், சாலையோரம் வசிக்கும் மக்களின் அவலம் பற்றி எழுதியிருப்பேன். அதன் தொடர்ச்சியாக ஏசியாவில் செய்தி குழு சார்பாகக் களத்திலிருந்து சாலையோரத்தில் வசிக்கும் மக்களின் நிலை பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. அதில் பேசிய ஒருவர், இரண்டு நாள் மழை பெய்தால், அந்த வாரம் முழுக்க வேலையில்லாமல் போய்விடும் என்றார். அப்படிப் பார்த்தால், இப்போது இருக்கும் சூழலில், இம்மக்களின் நிலை மிகவும் மேசமானதாக இருக்கும்.
Central Chennai Prince @siva_kartikeyan Fans Club donated food to people to alleviate the hunger of those affected by the heavy rains in Chennai.????❤️ #ChennaiRains pic.twitter.com/jNUtCAp0RY
— Ramesh Bala (@rameshlaus) November 9, 2021
அதேபோல் சாலையில் வசிக்கும் மக்கள், தற்காலிகமாகப் பல இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்குச் சொந்தமாகச் சமைக்கக் கூட வழியில்லாமல் உள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு மீட்டுவருகின்றனர்.
சென்னையில் மட்டுமா மழை?
சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையைப் போன்று தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமான கடலூர் உள்ளது. அம்மாவட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாக ஆய்வு செய்ய உள்ளார்.
#cuddalorerains ???????? pic.twitter.com/ekHlZ53Pxx
— ஹரி (@Hari_Ganesh_off) November 8, 2021
சென்னையைப் போன்று கடலூரிலும் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்டா மாவட்டங்களின் நிலை?
மற்ற மாவட்டங்களைப் போலவே டெல்டா மாவட்டங்களிலும், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளன. வேளாண் துறை அதிகாரிகளின் தகவல்படி, தஞ்சை மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்க விவசாய நிலம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் வயல்களில் தேங்கியுள்ள நீர் வடியவில்லை என்றால், இந்த பாதிப்பின் அளவு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நினைவு கூரவேண்டிய சம்பவம்
அண்ணாநகர் பகுதியில் மரம் முறிந்து விழுந்து, இளைஞர் ஒருவர் இறந்துவிட்டார் என்று கருதப்பட்ட நிலையில், அவரை தக்க நேரத்தில் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரி வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
மீட்பு பணியில் காவல்துறையினர் pic.twitter.com/3kUBg8T0h6
— ரமேஷ்முருகேசன் (@rameshibn) November 11, 2021

Related Stories
"5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்" - சென்னை வானிலை மையம்!
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அம்பன் புயல் அதி உச்ச புயலாக மாறியது : சென்னை வானிலை ஆய்வு மையம்
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்