தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
"ஹிஜாப் அணிவது அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு வழங்கிய உரிமை!"
ஹாசன் அரசு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை சுற்றி காவி துண்டு அணிந்துவந்த மாணவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினர். அவர்களுக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக 'அல்லாஹ் அக்பர்' என முழக்கம் எழுப்பிய செய்தி நாம் அறிந்தது.
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூர் அரசு பியூ கல்லூரியில், ஹிஜாப் அணிந்துவந்த 6 இஸ்லாமிய மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த 6 மாணவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் அவர்களுக்கு எதிராக நாங்களும் காவி அணிவோம் என்று கூறி இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்களும் கழுத்தில் காவி துண்டுடன் `ஜெய் ஶ்ரீராம்' என கோஷமிட்டு கல்லூரிக்கு வந்தனர். இதேபோல் ஹாசன் அரசு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை சுற்றி காவி துண்டு அணிந்துவந்த மாணவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினர். அவர்களுக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக 'அல்லாஹ் அக்பர்' என முழக்கம் எழுப்பிய செய்தி நாம் அறிந்தது.
