தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
அனிதாவின் நீட் அநீதி “காற்றோடு மழை” பாடல் வெளியீடு
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவிற்கு சமர்பனம் செய்யும் வகையில் நீலம் யூடியுப் சேனலில் “ காற்றோடு மழை” என்ற பாடலை வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் தமயந்தி வரிகளில் சக்தி காந் கார்த்திக்கின் இசையமைப்பில் இந்த பாடல் வெளியாகியுள்ளது.
நீலம் பண்பாட்டு மையம், நீட் அனிதாவிற்காக “காற்றோடு மழை” என்ற பாடலை சமர்ப்பணமாக்கியுள்ளது.
அனிதா இறந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகளான நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவிற்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் நீலம் யூ டியூப் சேனலில் “காற்றோடு மழை” என்ற பாடலை வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் தமயந்தி வரிகளில், சக்தி காந்த் கார்த்திக்கின் இசையமைப்பில் இந்த பாடல் வெளியாகியுள்ளது.
சமமான கல்வி இல்லாத இந்நாட்டில்! எப்படி எல்லோருக்கும் பொதுவான தேர்வு #NEET நீதி ஆகும்? தேர்வுகள் கண்டு பயம் இல்லை அனிதாக்களுக்கு(1200/1176) எங்கள் கல்விக்கான தேர்வா? இல்லை “அநீதி”. ???? @Shakthikanth ✍️@rjdhamayanthi @NeelamSocial #DrAnithasong நினைவாக ???? https://t.co/qwFz27bPKi pic.twitter.com/ydtyyHfe4n
— pa.ranjith (@beemji) September 1, 2019
